கோவை:கோவை ரயில்வே பணிமனை சார்பில், நேற்று (டிசம்., 20ல்)கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.விழாவில், ஊழியர்கள் சிலர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து, கேக் வெட்டினர். 100க்கும் மேற்பட்ட பணிமனை ஊழியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில், கிறிஸ்துமஸ் வரலாறு குறித்து விவரிக்கப்பட்டு இறுதியில், இனிப்புகள் வழங்கப்பட்டன.கோவை ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் செந்தில்வேல், எஸ்.ஆர்.எம்.யூ., கோவை தலைமை கிளை செயலாளர் ஜோன், பணிமனை தலைமை பிரிவு இன்ஜினியர் ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.