பதிவு செய்த நாள்
21
டிச
2018
02:12
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் மரகத நடராஜர் சன்னதியில் நாளை (டிசம்., 22ல்) நடைபெறும் சந்தனகாப்பு களைதல் மற்றும் ஆருத்ரா தரிசன விழாவில் 40 ஆயிரம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்க
ப்படுகிறது. பாதுகாப்புக்காக 20 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில், மரகத நடராஜர் சன்னதி உள்ளது. இங்குள்ள மரகத நடராஜர் சிலை ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு பாதுகாக்கப் படுகிறது.
ஆருத்ரா தரிசனத்தின் போது ஆண்டு தோறும் சுவாமி சிலையில் பூசப்பட்டுள்ள சந்தனம் களையப்பட்டு சந்தனாதி தைலம் பூசப்பட்டு புதிய சந்தனக்காப்பு நடைபெறும். அன்று நாள் முழுவதும் பக்தர்களுக்கு மரகத நடராஜர் காட்சியளிப்பாளர்.
இந்தாண்டு நாளை (டிசம்., 22) காலை 10:30 மணிக்கு சந்தன காப்பு களையப்படும். 11.00 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.
அதன் பின் கூத்தர் பெருமான் கல்தேர் மண்டபம் எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு 11:30 மணிக்கு மரகத நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடக்கிறது.
காலை அருணோதய காலத்தில் புதிய சந்தனம் பூசப்பட்டு, ஆருத்ரா தரிசனம் டிச., 23 (ஞாயிறு) காலை 10:00 மணிக்கு நடக்கிறது.அதன் பின் கூத்தர் பெருமாள் வீதியுலாவும், மாலை 4:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம், இரவு 8:00 மணிக்கு மாணிக்கவாசக சுவாமி களுக்கு காட்சி கொடுத்து, பஞ்சமூர்த்தியுடன் வெள்ளி ரிஷப சேவை நடக்கிறது.
பாதுகாப்பு: மங்களநாத சுவாமி கோயிலில் 8 சிசி டிவி கேமராக்கள் இருந்தது. தற்போது 20 புதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்தாண்டு 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்தாண்டு சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் 40 ஆயிரம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டண தரிசனம்: பக்தர்கள் டிச., 22 காலை 11:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். கட்டண தரிசனமாக 10, 20, 100 ரூபாய் வசூலிக்கப் படவுள்ளது. 100 ரூபாய் கட்டண தரிசனம் செய்பவர்களுக்கு சுவாமி உடலில் சாத்தப்பட்ட சந்தனம் பிரசாதமாக வழங்கப்படும்.
கோயில் நிர்வாக செயலாளர் வி.கே. பழனி வேல்பாண்டியன் கூறியதாவது: கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. உபயதார்கள், பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு குடி நீர் வழங்க ஏற்பாடு செய்யப்
பட்டுள்ளது, என்றார்.