பதிவு செய்த நாள்
22
டிச
2018
11:12
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, ஆவுடையார்கோவில், ஆத்மநாதசுவாமி கோவிலில் திருவாதிரையையொட்டி தேரோட்டம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலில், உலக பிரசித்தி பெற்ற ஆத்மநாத சுவாமி கோவில் உள்ளது. இது, திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானது. கடந்த, 13ம் தேதி முதல் திருவாதிரை விழா நடந்து வருகிறது. நேற்று,ஏழாம் நாள் விழாவை முன்னிட்டு, கோவிலுக்கு வந்த, திருவாவடுதுறை, 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாண பரமாச்சரிய சுவாமிகளுக்கு, மாணிக்கவாசகர் அலங்கார மண்டபத்தில் பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாணிக்கவாசகருக்கு நடந்த சங்காபிஷேகத்தில் கலந்து கொண்டு தீபாரதனை வழிபாடு செய்து, பக்தர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கினார். பின், மாணிக்கவாசகர் தேரோட்டம் நடந்தது, இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்தனர்.