நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் பகுதி கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. நடுவீரப்பட்டு காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் நேற்று (டிசம்., 23ல்) காலை 10:00 மணிக்கு விநாயகர், மாணிக்கவாசகர், சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மதியம் 2:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.சி.என்.பாளையம் மலையாண்டவர் என்ற ராஜராஜேஸ்வரர் கோவிலில் சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து, சுவாமி ஆலய உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.