பதிவு செய்த நாள்
24
டிச
2018
04:12
குமாரபாளையம்: குமாரபாளையம், அக்ரஹாரம் காசிவிஸ்வேஸ்வரர் கோவிலில், நேற்று (டிசம்., 23ல்) ஆருத்ரா தரிசன விழாவையொட்டி காலை, 4:00 மணிக்கு திருமஞ்சனம், மஞ்சள், பால், பன்னீர், தேன், இளநீர், விபூதி உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. 8:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், சுவாமிகளின் திருவீதி உலா மேள தாளங்கள் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. இதேபோல், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில், கோட்டைமேடு சிவன் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.