பதிவு செய்த நாள்
24
டிச
2018
04:12
அரூர்: அரூரில், நேற்று (டிசம்., 23ல்) நடந்த, ஜெகன்நாதர் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அரூர் -சேலம் பிரதான சாலையில், உள்ள என்.என்., மஹால் திருமண மண்டபத்தில் இருந்து, நேற்று மாலை, தேரோட்டம் துவங்கியது. ஜெகன்நாதர், பலதேவ், மதிசுபத்ரா தேவி ஆகியோரது சிலைகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தேரில் பவனி வந்தது. நான்குரோடு, திரு.வி.க., நகர், கச்சேரிமேடு, தாலுகா அலுவலக வளாகம், பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, நடேச பெட்ரோல் நிலையம் வழியாக வந்த தேரோட்டம், மீண்டும் மண்டபத்தை அடைந்தது. ஏராளமான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து, ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை, இஸ்கான் அமைப்பினர் செய்திருந்தனர்.