வால்பாறை:மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் திறப்பு விழா மற்றும் கலச விளக்கு வேள்விபூஜை விழா நடந்தது.வால்பாறை கக்கன் காலனி மதுரை வீரன் கோவில் அருகில் உள்ள, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் இருந்து, சிறுவர் பூங்கா பகுதியில் உள்ள புதிய மன்றத்திற்கு, அம்மன் ஊர்வலம் நடந்தது.அதனை தொடர்ந்து, மன்ற தலைவர்முத்துமாரிதங்கம் வரவேற்றார். கலச விளக்கு வேள்வி பூஜையை கோவைமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம்வழங்கப்பட்டது.