நத்தம் : நத்தம் பெரிய பள்ளிவாசல், சைய்யது ஷாஹ் ஹமீதுல் ஆஷிக்கீன் தர்ஹாவில் சந்தன உரூஸ் விழா நடந்தது. நாகூரிலிருந்து புனித சந்தனம் நிரம்பிய குடம் எடுத்து வரப்பட்டிருந்தது. வாண வேடிக்கை முழங்க, நாகூர் சலங்கை ஒலியுடன் தர்ஹாவிலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. சந்தனக்குடத் தெரு, பெரியகடைவீதி, மஸ்தான் பள்ளிவாசல் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தர்ஹாவை அடைந்தது. உலக நன்மை வேண்டி சிறப்பு பிரார்த்தனையுடன் புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. முகமது சாலியா, நசீர் அகமது சையது, முகமது மீரான், ஜூல்பிகர் உள்பட தர்ஹா நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.