ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் குவியும் ஐயப்ப பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2018 11:12
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ராப்பத்து உற்ஸவ எட்டாம் நாளில் குதிரை வாகனத்தில் பெரிய பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை விடபட்டுள்ளதால் தங்கள் பிள்ளைகளுடன் சபரிமலைக்கு சென்று திரும்பும் ஐயப்ப பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் தரிசனம் செய்ய வருவது அதிகரித்து வருகிறது. கடந்த டிச.22 முதல் தமிழகத்தில் பள்ளி அரையாண்டு தேர்வுகள் முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை விடபட்டுள்ளது. இதை தொடர்ந்து பிள்ளைகளுடன் ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பும் பக்தர்கள் கடந்த 3 நாட்களாக ஆண்டாள் கோயிலுக்கு வருவது அதிகரித்துள்ளது. மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோயிலுக்கு செல்லும் பெண்பக்தர்களும் அதிகளவில் வருகின்றனர். இதனால் ரதவீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயிலில் வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். கோயிலை சுற்றியபூக்கடைகள், பால்கோவா கடைகள், ஓட்டல்களில் விற்பனை சூடுபிடித்து வருகிறது. சாதரண பாமரர்கள் முதல் நீதிபதிகள், அரசுத்துறை அதிகாரிகள் என வி.ஐ.பி.,க்கள் அதிகம் வருகின்றனர்.