பதிவு செய்த நாள்
26
டிச
2018
01:12
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே குரும்பபாளையம் அம்மணீஸ்வரர் கோவிலில், மகா குரு அகத்தியர் குரு பூஜை விழா நேற்று (டிசம்., 25ல்) துவங்கியது.
விழாவையொட்டி நேற்று (டிசம்., 25ல்) இரவு, 8:00 மணிக்கு மகா யாகம் நடந்தது. இன்று (டிசம்., 26ல்) அதிகாலை, 4:00 மணிக்கு, கோ பூஜை, காலை, 6:00 மணிக்கு அகத்தியர் குரு பூஜை சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. காலை, 9:30 முதல், மதியம், 1:30 மணி வரை திருமுறை திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை, 27ம் தேதி காலை, 6:00 மணிக்கு, கணபதி, மும்மூர்த்தி கள், முத்துக்குமாரசுவாமி, சண்டிகேஸ்வரர், தக் ஷணா மூர்த்தி, கால பைரவர் அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை வழிபாடும் நடக்கிறது.காலை, 10:30 மணிக்கு, சங்காபிஷேகம்; மாலை, 4:00 மணிக்கு திண்டுக்கல் சிவனடியார் திருக்கூட்டம், கையிலாய வாத்தியத்துடன் அம்மையப்பர் நகர்வலம் நிகழ்ச்சி நடக்கிறது.
(டிசம்., 26, 27ல்)இன்று மற்றும் நாளையும், காலை, 8:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை மகா அன்னதானம் நிகழ்ச்சி நடக்கிறது.