பதிவு செய்த நாள்
26
டிச
2018
01:12
வெள்ளகோவில்:வெள்ளகோவில், அம்மன் கோவில் வீதி, திருமலையம்மன் கோவிலில் பொங்கல் மற்றும் தீர்த்தக் காவடி அபிஷேக விழா, 28ம் தேதி நடக்கிறது.
இதையொட்டி, 28ம் தேதி காலை, 11:00 மணிக்கு, கொடுமுடிக்கு சென்று காவிரி தீர்த்தம் எடுத்து வருதல், மதியம், 2:00 மணிக்கு கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தல் மற்றும் சுவாமிக்கு சிறப்பு பூஜை ஆகியன நடக்கிறது.அன்றைய தினம், மாலை, 6:00 மணிக்கு, திருமலையம்மனு க்கு தீர்த்தக்காவடி அபிஷேகம், யாக பூஜைகள் நடக்கிறது. இரவு, மஹா தீபாராதனை, பிரசாதம், அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் குலத்தவர், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.