மதுரை சிம்மக்கல் செல்லத்தம்மன் கோயிலில் ஜன., 6 பட்டாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27டிச 2018 01:12
மதுரை: மதுரை சிம்மக்கல் செல்லத்தம்மன் கோயிலில் ஜன., 6 செல்லத்தம்மன் பட்டாபிஷேகம் நடக்கிறது. மீனாட்சி அம்மன் கோயிலின் துணை கோயிலான இக்கோயிலில் கண்ணகி இடது காலில் சிலம்புடனும், வலது கையில் சிலம்புடனும், வலது கையில் செண்டு ஏந்திய நிலையில் எழுந்தருளியுள்ளார். இங்குள்ள பேச்சியம்மனை வழிபடுவோருக்கு பேச்சாற்றல் ஏற்படும்,
பகைவர்களின் தொல்லைகள் நீங்கி, பிரச்னைகள் அகலும் என்பது ஐதீகம். கோயிலின் முக்கிய நிகழ்வான பட்டாபிஷேகம் விழா டிச.,30 கொடியேற்றத்துடன் துவங்கி ஜன.,8 வரை நடக்கிறது. ஜன.,6 செல்லத்தம்மனுக்கு பட்டாபிஷேகம் முடிந்ததும் மீனாட்சி அம்மன் கோயிலில் எழுந்தருள்வார். ஜன.,7 சட்டத்தேர், ஜன.,8 மலர்ச்சப்பரம் நடக்கிறது.