மதுரையில் இந்து ஆலய பாதுகாப்பு மாநாடு : டிச.30ல் நடக்கிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27டிச 2018 12:12
மதுரை: இந்து ஆலயப் பாதுகாப்பு குழு சார்பில் பொன் விழா ஆண்டு மாநில மாநாடு மதுரைக் கல்லூரி மைதானத்தில் டிச.,30, மாலை 4:00 மணிக்கு நடக்கிறது. இம்மாநாடு குறித்து பாதுகாப்பு குழு நிர் வாகிகள் கூட்டம் மதுரைக் கல்லூரியில் நடந்தது. மாநில தலைவர் தெய்வபிரகாஷ் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் சுடலைமணி, மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணா, மாநாட்டு வரவேற்பு குழு செயலாளர் விஸ்வநாதன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
தெய்வபிரகாஷ் கூறுகையில், "மாநாடு வரவேற்பு குழு தலைவர் சீனிவாசன் தலைமையில் நடக்கும். விழா மலரை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிடுகிறார். வி.எச்.பி., வடதமிழக மாநில தலைவர் மணியன், ஆடிட்டர் விஸ்வநாதன் மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.
இந்து கோயில்களை பாதுகாப்பது உள்ளிட்ட பக்தர்கள் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்," என்றார்.