சின்னவடவாடி திரவுபதியம்மன் கோவிலில், உலக அமைதி வேண்டி திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27டிச 2018 02:12
மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டை அடுத்த சின்னவடவாடி திரவுபதியம்மன் கோவிலில், உலக அமைதி வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது.
இதையொட்டி காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பகல் 12:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. இரவு 8:00 மணியளவில் நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.