பதிவு செய்த நாள்
28
டிச
2018
02:12
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, மந்தைவெளி முத்து மாரியம்மன் கோவிலில் உள்ள அய்யப்ப சுவாமிக்கு நேற்று மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது. இதையொட்டி, அதிகாலை மகாகணபதி ஹோமம், தீபாராதனை, தொடர்ந்து கோமுகி ஆற்றிலிருந்து சுவாமி சக்தி அழைத்து, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நெய், பால், தயிர், இளநீர், சந்தனம், எலுமிச்சம்பழம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும், சிறப்பு அலங்காரத்துடன், புஷ்பாஞ்சலி செய்து, மகா தீபாராதனை நடந்தது. அய்யப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் ஆலயத்திலும், கமலா நேரு தெரு காமாட்சி அம்மன் கோவில், துருகம் ரோடு பழைய மாரியம்மன் கோவில், காந்திரோடு அய்யப்பன் கோவிலிலும் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது.