பதிவு செய்த நாள்
31
டிச
2018
12:12
மணலிபுதுநகர்: அற்புத குழந்தை இயேசு ஆலய, ஆண்டு பெருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில், 1,000க்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர். மணலிபுதுநகர், அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தில், 39ம் ஆண்டு பெருவிழா, நேற்று முன்தினம் இரவு, கொடியேற்றத்துடன் துவங்கியது. திருத்தல வளாகத்தில், புதிதாக நிறுவப்பட்ட, 60 அடி உயர புதிய கொடிமரத்திற்கு, நேற்று முன்தினம் இரவு, அர்ச்சிக்கப்பட்டது. குழந்தை இயேசுவை தாங்கிய மாதா உருவம் பொறித்த கொடி, ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லான்ரஸ் பயஸ் பங்கேற்று, கொடியை ஏற்றி, ஆண்டு பெருவிழா துவக்கி வைத்தார். விழாவில், மாணவியரின் பரதநாட்டியம் அரங்கேறியது. ஒன்பது நாட்கள் நடக்கவுள்ள, ஆண்டு பெருவிழாவில், நாளை இரவு, புது வருட திருப்பலி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான, தேர் பவனி, 5ம் தேதி நடைபெற உள்ளது. அன்று, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வரும், 6ம் தேதி இரவு, கொடியிறக்கத்துடன் விழா நிறைவுறும்.