பதிவு செய்த நாள்
31
டிச
2018
12:12
சேலம்: ருக்மணி, விட்டலன் திருக்கல்யாணத்தில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தமிழ்நாடு பிராமணர் சங்கம், சின்னதிருப்பதி கிளை; விஷ்ணு சஹஸ்ர நாம கோஷ்டி, ருக்மணி விட்டலன் திருக்கல்யாண ம ?ஹாத்சவ கமிட்டி ஆகியவை இணைந்து, சேலம், கன்னங்குறிச்சி, அண்ணாமலையார் திருமண மண்டபத்தில், நேற்று, ருக்மணி தாயார் பாண்டுரங்க விட்டலன் திருக்கல்யாணத்தை நடத்தின. அதையொட்டி, நித்யா நகர் ராகவேந்திரா பிருந்தாவனத்திலிருந்து, நேற்று முன்தினம், பெருமாள், தாயார், சீர்வரிசையுடன் மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். நேற்று காலை, கிருஷ்ண சந்த்ரவர்மனுக்கும், ருக்மணி பிராட்டிக்கும், மாங்கல்யதாரணம் நடந்தது. தொடர்ந்து, ருக்மணி, பாண்டுரங்க விட்டலன் திருமணக்கோலத்தில் அருள்பாலித்தனர். பிராமணர் சங்க, சேலம் மாவட்ட பொதுச்செயலாளர் சீனிவாசன், மாநில தலைவர் ராமகிருஷ்ணன், மாநில முன்னாள் தலைவர் ஸ்ரீராமன், சேலம் மாவட்ட தலைவர் சாய்ராம், திரளான பக்தர்கள், தரிசனம் செய்தனர்.