புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளையில் அய்யப்ப சுவாமி பட ஊர்வலம் நடந்தது.புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளையில் அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வந்த பின், அய்யப்ப சுவாமியின் படத்தை அலங்கரித்து ஊர்வலமாக எடுத்து செல்வது வழக்கம். இந்தாண்டு ஐம்பதுக்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலைக்கு சென்று திரும்பினர்.அதனையொட்டி நேற்று முன்தினம் அய்யப்ப சுவாமி படம் ஊர்வலம் நடந்தது. காலை 10.00 மணிக்கு அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6.00 மணிக்கு ஐயப்ப சுவாமி படம் அலங்கரிக்கப்பட்டு கிராமம் முழுவதும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கிராம மக்கள் தரிசனம் செய்தனர்.