பதிவு செய்த நாள்
02
ஜன
2019
12:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, 27 அடி உயர ஆதி ஐயப்பன் சிலைக்கு 27 அடி உயர ஆதி ஐயப்பன் சிலைக்கு கும்பாபிஷேகம் விழா நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், வாணாபுரம் அடுத்த க.உண்ணாமுலைபாளையம் கிராமத்தில், 27 ராசி நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு, 27 அடி உயர ஆதி ஐயப்பன் சிலை அமைக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன் கும்பாபி ?ஷகம் நடந்தது. நேற்றுடன் இரண்டு ஆண்டு முடிந்த நிலையில், கும்பாபி ?ஷக விழா நடந்தது. இதை முன்னிட்டு, வாஸ்து சாந்தி, விக்னேஷ்வர பூஜை நடந்தது. பின்னர், யாக சாலையில் வைக்கப்பட்ட புனித கலச நீரை, அரிபுத்திர சுவாமி தலைமையில், 27 அடி உயர ஐயப்பன் மீது ஊற்றி கும்பாபி ?ஷகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். இதை தொடர்ந்து, விரதமிருந்து மாலை அணிந்து வந்த பக்தர்கள், 18 படி ஏறி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு ஜோதி தரிசன விழா நடந்தது.