பதிவு செய்த நாள்
21
பிப்
2012
11:02
குற்றாலம் : குற்றாலம் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. குற்றாலம் டவுன் பஞ்., நிர்வாகத்திற்குட்பட்ட கோமதி விசாலாட்சி அம்பாள் சமேத சங்கரலிங்கம், காசிலிங்கசுவாமி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. இரவில் நான்கு கால அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை டவுன் பஞ்., தலைவர் லதா, அசோக்பாண்டியன், துணைத் தலைவர் கணேஷ் தாமோதரன், கவுன்சிலர்கள் ஷீலா, ஜெய்சங்கர், சேகர், நிர்வாக அதிகாரி ராசையா, டாக்டர் வீரமணி, தங்கம் பலவேசம், திருப்பணிக்குழு தலைவர் சீனிவாச குருசாமி, செயலாளர் ராஜேந்திரன் மற்றும் குலதெய்வம் வகையறாக்கள் செய்திருந்தனர். பூஜை வழிபாடுகளை பரம்பரை அர்ச்சகர் சங்கரராமன் நடத்தினார்.