வெண்ணைமலை கோவிலில் தைப்பூசம் விழா வரும், 13ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2019 01:01
கரூர்: வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழா வரும், 13ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, 18 வரை, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பல்லக்கு ஊர்வலம் நடக்கிறது. 19 மதியம், 12:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம், 21 மாலை திருத்தேர், 22ல் தேனு தீர்த்தத்தில் தீர்த்தவாரி முதலான வைபவங்கள் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.