பதிவு செய்த நாள்
05
ஜன
2019
05:01
நாமக்கல்: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, ஒரு லட்சத்து, 8 வடமாலை சாற்றப்பட்டது. நாமக்கல் நகரின் மத்தியில், புரான சிறப்புப் பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஒரே கல்லினால் உருவான, 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி, நின்ற நிலையில், சாந்த சொரூபியாக, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ஆண்டு தோறும், மார்கழி மூல நட்சத்திரத்தில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு, ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா, கோலாகலமாக நடந்தது. காலை, 5:00 மணிக்கு, ஆஞ்சநேயர் சுவாமிக்கு, ஒரு லட்சத்து, 8 வடைமாலை சாற்றப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், மதியம், 1:00 மணிக்கு, தீபாராதனை, தங்க கவச அலங்காரம் நடந்தது. காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். தமிழ்நாடு மின்வாரியம் சார்பில், தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு நீர்மோர், பானகம் வழங்கினர். மேற்பார்வை பொறியாளர் சந்தானம் துவக்கி வைத்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் உதவி ஆணையர் வெங்கடஷே், செயல் அலுவலர் ரமஷே் ஆகியோர் செய்திருந்தனர்.