மார்கழி அமாவாசை: அக்னி தீர்த்த கடலில் நீராடிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2019 02:01
ராமேஸ்வரம்:மார்கழி அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். நேற்று மார்கழி அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு ஏராளமான தமிழக பக்தர்கள் வந்தனர். முன்னோர் ஆன்மா சாந்தியடைய வேண்டி அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி பூஜை செய்தனர். பின், அக்னி தீர்த்த கடலில் சிவசிவ என கோஷமிட்டபடி புனித நீராடினர். அதன் பின் கோயிலுக்குள் உள்ள புனித தீர்த்தத்தில் நீராட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.