அனுவாவி கோவிலில் ராமர் பாதத்துக்கு ஆயிரத்தெட்டு கலசாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2019 11:01
பெ.நா.பாளையம்: பெரியதடாகத்தில் உள்ள அனுவாவி ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஸ்ரீராமர் பாதத்துக்கு ஆயிரத்தெட்டு கலசாபிஷேகம் நடந்தது.அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி நடந்த இச்சிறப்பு நிகழ்ச்சிகள் கடந்த, 4ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்தன.விழாவையொட்டி தினசரி காலை, 10:00 மணிக்கு, தேன் அபிஷேகம், ஆயிரத்தெட்டு கலசாபிஷேகம் ஆகியன நடந்தன. இதில், கோவையில் உள்ள முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.