மதுராந்தகம்: மதுராந்தகம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில், பால்குட விழா சிறப்பாக நடைபெற்றது. மதுராந்தகத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில், 108 பெண்கள் பங்கேற்ற பால்குட விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, மூன்று நாட்களுக்கு துளசி மாலை அணிந்து, விரதமிருந்த பெண்கள், பால்குடம் எடுத்தனர். ஏரிகாத்த கோதண்டராமர் கோவிலில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, சூரக்கோட்டையில் உள்ள நரசிம்ம சுவாமி கோவிலுக்கு சென்றனர். ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம், யாக பூஜை, வேள்வி பூஜைகளும் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.