பதிவு செய்த நாள்
07
ஜன
2019
03:01
மகாண்யம்:அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, மகாண்யத்தில் உள்ள, 24 அடி உயர அனுமனுக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே, மகாண்யம் கிராமத்தில், கல்யாண சீனிவாசப்பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, 24 அடி உயரத்தில், கன்யாகுமாரி ஸ்ரீஜய அனுமன் சிலை உள்ளது.அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று முன்தினம் (ஜன., 5ல்), 10 ஆயிரத்து 8 வடை மாலை சாத்தப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.