பதிவு செய்த நாள்
07
ஜன
2019
03:01
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலையை, பிரம்ம முகூர்த்த நேரத்தில், சித்தர்கள் கிரிவலம் வந்தனர். திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற, வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது.
சமய குரவர் நால்வராலும், நான்கு வேதங்களாலும் இங்குள்ள வேதகிரீஸ்வரர் புகழபட்டுள்ளார். சிறப்பு வாய்ந்த இவ்வூரில் திருவண்ணாமலை போல, மாதந்தோறும் பக்தர்கள் பிரார்த்தனைக் காக, கிரிவலம் செல்கின்றனர்.
அதுபோல, ஆண்டுதோறும் தட்சிணாயனம் தனுர் மாத அமாவாசை தினத்தன்று, உலக நன்மைக் காக சித்தர்கள் கிரிவலம் வருதல் நடக்கிறது.இந்தாண்டின் சித்தர்கள் கிரிவலம், நேற்று (ஜன.,6ல்) அதிகாலை, 3:00 மணிக்கு நடந்தது. பின், திரிபுரசுந்தரி சமேத வேதகிரீஸ் வரரை வழிபட்டனர்.