பண்ருட்டியில் உலக நன்மை பெற வேண்டி ஆன்மிக குழு நடைபயணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2019 01:01
பண்ருட்டி: பண்ருட்டியில் உலக நன்மை பெற வேண்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் இருந்து ஆன்மிக நடைபயணம் துவங்கியது.திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் இருந்து ஆன்மீக நடைபயண குழுவினர் நேற்று முன்தினம் (ஜன., 6ல்) ஊர்வலமாக புறப்பட்டு, பண்ருட்டி கடலூர் ரோடு, காந்தி சாலை வழியாக சென்று புதுப் பேட்டை அடுத்த கோட்டலாம்பாக்கம் சித்தவடமடம் சிவகாமி சமேத சுந்தரேஸ்வரர் கோவிலை சென்றடைந்தனர்.பின்னர் சிறப்பு வழிபாடு நடந்தது.
திருவதிகை திலகவதியார் திருநாவுக்கரசர் திருக்கூட்டத்தினர் மற்றும் துர்க்கா மகளிர் மன்றத்தினர், திரளாக கலந்து கொண்டனர். நடை பயணத்தின் போது நமச்சிவாய மந்திரங்கள், தேவாரம், திருவாசகம் பதிகங்களை ஒதுவார்கள் பாடிச் சென்றனர்.