பதிவு செய்த நாள்
12
ஜன
2019
02:01
செஞ்சி: சிறுகடம்பூர் சுப்பிரமணியர் கோவிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.செஞ்சி அடுத்த சிறுகடம்பூரில் கிருஷ்ணகிரி மலையடிவாரம் உள்ள சுப்ரமணியர் கோவிலில் 39ம் ஆண்டு தைப்பூச விழா 21ம் தேதி நடக்க உள்ளது. இதை முன்னிட்டு நேற்று காலை 5:00 மணிக்கு விக்னேஷ்வருக்கு சிறப்பு வேள்வி நடந்தது. 6:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். காலை 10:00 மணிக்கு திருமுருகன் சுவாமிகள் தலைமையில் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்து கொடியேற்றம் நடந்தது. விழாவை தொடர்ந்து 20ம் தேதி வரை காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடக்க உள்ளன. 20ம் தேதி இரவு சாமி வீதி உலாவும், 21ம் தேதி காலை 5:00 மணிக்கு சிறப்பு வேள்வியும், 6:00 மணிக்கு சக்திவேல் அபிஷேகமும், 8:00 மணிக்கு 108 திரவிய அபிஷேகமும், 12:30 மணிக்கு பஞ்சரட்ச தீபாராதனை, குருசாமிக்கு மிளகாய் பொடி அபிஷேகம், 1:30 மணிக்கு தீமிதித்தல், செடல் சுற்றுதல், ஆகாய மாலை அணிவித்தல், தேர் இழுத்தல் நடக்கிறது.