திண்டிவனம்: திண்டிவனம் மன்னார்சாமி கோவில் திடலில், இன்று 12ம் தேதி ஆண்டாள் -சீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.திண்டிவனம், மரக்காணம் ரோட்டில் அமைந்துள்ள மன்னார்சாமி கோவில் திடலில், அலர்மேல் மங்கை ஸ்ரீ ஆண்டாள், சீனிவாச பெருமாள் 12ம் ஆண்டு திருக்கல்யாண வைபவத்திற்கு இன்று 12ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விழாவையொட்டி, இன்று மாலை 5:00 மணிக்கு திருமஞ்சனமும், 6:00 மணிக்கு பஜனை சொற்பொழிவும், இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சீனிவாசபெருமாள் திருக்கல்யாண கமிட்டி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.