கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் கூடாரவல்லி உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜன 2019 01:01
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் கூடார வல்லி உற்சவம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் தனுர் மாத சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடுகள் நடந்து வருகிறது. பெருமாள் ஆண்டாளை திருக்கல்யாணம் செய்து கொள்ள உறுதியளித்த நாட்களையே கூடார வல்லி தினமாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி ஆண்டாள் பாவை விரதம் இருந்து நிறைவுற்ற நாளான நேற்றுமுன்தினம் கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் கூடாரவல்லி வைபவம் நடத்தினர். பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, சேவை சாற்று முறை பூஜைகளுக்கு பின் அலங்கார தீபங்கள் காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாளை 14ம் தேதி ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.