பதிவு செய்த நாள்
13
ஜன
2019
01:01
பல்லடம்: பல்லடத்தை அடுத்த அல்லாளபுரத்தில், ஸ்ரீபூமி நாளா சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. மார்கழி, 27ம் நாளை முன்னிட்டு, கூடாரை வெல்லும் சீர் உற்சவ விழா கொண்டாடப்பட்டது.முன்னதாக, விஸ்வக்ேஷன ஆராதனை, சுத்தி புண்யாஹம், கலச ஆவாஹனம், திருமாங்கல்ய தாரம், மற்றும் சிறப்பு ஹோமங்களுடன், விழா துவங்கியது. பட்டு துணிகள், நகை, வளையல், பழம், இனிப்பு உள்ளிட்ட அனைத்து சீர்வரிசைகளுடன், பத்மாவதி ஸ்ரீனிவாச திருகல்யாணம் நடந்தது.அதன்பின், திருக்கல்யாண கோலத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு கல்யாண விருந்து அளிக்கப்பட்டது.