பதிவு செய்த நாள்
16
ஜன
2019
01:01
பொள்ளாச்சி:உடுமலை ரோட்டில், பி.ஏ.பி., அலுவலகம் எதிரிலுள்ள கருப்பராய சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் பூப்பொங்கல் பண்டிகையன்று, சிறப்பு வழிபாடு நடக்கிறது.
இந்தாண்டு, பூப்பொங்கலையொட்டி, கருப்பராய சுவாமிக்கு, காலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடக்கிறது. கிராமங்களில் இருந்து மக்கள் மாட்டு வண்டியில் வந்து கருப்பராய சுவாமியை வழிபடுவர். அதனால், உடுமலை ரோட்டில் வாகனங்கள் நிறுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாலை நேரத்தில், பொதுமக்கள், குழந்தைகளுக்கான கடைகள் பொருட்கள் விற்பனைக்கு கடைகள் வைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.