பதிவு செய்த நாள்
17
ஜன
2019
01:01
குன்னூர்:குன்னூர் டென்ட்ஹில் பகுதியில் அமைந்துள்ள முனீஸ்வரர் கோவிலில், 50வது ஆண்டு பொங்கல் விழா நடந்தது. விழாவையொட்டி, கோவிலில், 8:45 மணிக்கு கணபதி ஹோமம், முனீஸ்வரர், ராஜகணபதி சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை, நடந்தன.தொடர்ந்து, தந்தி மாரியம்மன் கோவிலில் புறப்பட்ட அலங்கார ரதம் டென்ட்ஹில் முனஸ்வரர் கோவிலை அடைந்தது. அதில், சீர்தட்டு ஊர்வலம் தாரை தப்பட்டை, சிங்காரி மேளத்துடன் குன்னூர் மவுன்ட்ரோடு, பாலகிளவா வழியாக டென்ட்ஹில்லை அடைந்தது.
மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.தொடர்ந்து சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. மங்கள ஆரத்தியுடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.