பதிவு செய்த நாள்
17
ஜன
2019
02:01
உடுமலை:உடுமலை, சோமவார பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா, உழவர் திருநாள் பூஜையுடன் நேற்று (ஜன., 16ல்)துவங்கியது.
முக்கிய நிகழ்வான உருவார சிறப்பு பூஜை இன்று (ஜன., 17ல்)நடக்கிறது.உடுமலை அருகேயுள்ள, சோமவாரபட்டியில், பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவிலில், தைப்பொங்கல் தமிழர் திருநாள் ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
கால்நடைகளை காக்கும் தெய்வமான ஆல்கொண்டமால் கோவிலுக்கு, சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, ஏராளமான விவசாயிகள், மாட்டுப்பொங்கல் முதல் மூன்று நாட்கள் வருகின்றனர்.
பாரம்பரிய வழிபாடுகால்நடை செல்வங்கள் செழிக்கவும், கால்நடைகளை நோய், நொடிகள் அண்டாமல் பாதுகாக்கவும், வேளாண் வளம் சிறக்கவும் விவசாயிகள், ஆல்கொண்ட மாலுக்கு, பால் கொண்டு வந்து அபிஷேகம் செய்து வழிபடுவதையும், பாரம்பரிய வழிபாட்டு முறையாக கொண்டுள்ளனர்.பாரம்பரிய சிறப்பு மிக்க ஆல்கொண்டமால் கோவில் திருவிழா, நேற்று (ஜன., 16ல்) காலை சிறப்பு பூஜை மற்றும் மாலை உழவர் திருநாள் பூஜையுடன் துவங்கியது.
கால்நடைகளுக்கு ஏற்படும் பிணிகளுக்கு வேண்டி, அவை போன்று உருவாரங்களை நேர்த்திக்கடனாக செலுத்தியும், தை முதல்நாள் பிறக்கும் கன்றுகளை, ஆல்கொண்டமால் கோவிலுக்கு வழங்கியும் வழிபட்டனர்.முக்கிய நிகழ்ச்சியான சிறப்பு அபிஷேகம், உருவாரம்
வைத்து சிறப்பு பூஜை, அலங்கார பூஜைகள் இன்று (ஜன., 17ல்) நடக்கிறது.
சுற்றுப்புற கிராமங்களில், நாட்டு மாட்டு இனங்களைபாதுகாக்கும் வகையில் உள்ள, கிராமத்திற்கு பொதுவாக வளர்க்கப்படும் சலகெருதுகளுடன் விளையாடியும், தேவராட்டம் ஆடியும், பெண்கள் கும்மியடித்தும் கொண்டாடுகின்றனர்.இன்று, அந்த சலகெருதுகளுடன், கிராமம் ஒன்றாக, பாரம்பரிய இசை, நடனங்களுடன் ஊர்வலமாக வந்து வழிபாடு நடத்துவர்.
அதே போல், உடுமலை, பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, ஏராளமான விவசாயிகள் இன்று (ஜன., 17ல்) ஆல்கொண்டமாலை வழிபட வருவதால், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.களைகட்டிய வளாகம் நேர்த்திக்கடன் செலுத்தும் உருவாரங்கள் விற்பனை கடைகள், தேங்காய், பழம், பூக்கடைகள், உணவு பண்டங்கள், மாடுகளுக்கு தேவையான கயிறுகள், உழவுக்குத்தேவையான உபகரணங்கள் விற்கும் கடைகள் நூற்றுக்கணக்கில் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், ராட்டிணங்கள், சிறுவர்
விளையாட்டுக்கருவிகள் என பொழுது போக்கு அம்சங்கள், தை பொங்கலுக்கே உரித்தான கரும்பு விற்பனைக்கடைகள் என சுற்றிலும், பல ஏக்கர் பரப்பளவில் கடைகளாக
காணப்படுகின்றன.ஏறத்தாழ ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்கும் வாய்ப்புள்ளதால், கண்காணிப்பு கோபுரம், சிசிடிவி கேமரா என, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.சிறப்பு பஸ்கள் இயக்கம்உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளிலிருந்து, 50 சிறப்பு
பஸ்கள் இயக்கப்படுகின்றன. காணிக்கையாக வழங்கப்படும்
கன்றுகளுக்கு, ஆயிரம் ரூபாய் பராமரிப்பு கட்டணம் செலுத்துமாறு,இந்து சமய அறநிலைய துறை தெரிவித்துள்ளது. ஆண்டு தமிழர் திருநாள் திருவிழாவால், ஆல்கொண்டமால்
கோவில் வளாகம் களைகட்டியுள்ளது.