ஒன்பதாம்படி பகுதியில் பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2019 03:01
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அடுத்த, ஒன்பதாம்படி பகுதியில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பள்ளிபாளையம் வழியாக, கடந்த மூன்று நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை செல்கின்றனர். இவர்களுக்கு, ஒன்பதாம்படி பகுதியில் புத்துமாரியம்மன் கோவில் சார்பில், நேற்று முன்தினம் (ஜன., 15ல்) இரவு, 7:00 மணி முதல் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.