பதிவு செய்த நாள்
17
ஜன
2019
02:01
குமாரபாளையம்: சேலத்திலிருந்து, குமாரபாளையம் வழியாக, மூன்று சக்கர சைக்கிளில் வைத்து மனைவி தள்ளியபடி வர, முருக பக்தர் ஒருவர், பழநி யாத்திரை சென்றார். பல்வேறு
மாவட்டங்களில் இருந்து, பழநிக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர். சேலம், குகை பகுதியை சேர்ந்த மணி, 34, பெட்ரோல் பங்க் ஊழியர். இவரது மனைவி ராஜேஸ்வரி, 30. நடக்க முடியாத மாற்றுத்திறனாளியான மணி, மூன்று சக்கர சைக்கிளில் கடந்த, 10 ஆண்டுகளாக பழநிக்கு சென்று வந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: நான் தீவிர முருக பக்தன். பெட்ரோல் பங்க்கில் வாகனங்களுக்கு காற்று பிடிக்கும் வேலை செய்து வருகிறேன். எனக்கு கார்த்தி, 9, குகன், 5, என, இரு மகன்கள் உள்ளனர். 10 ஆண்டுகளாக பழநிக்கு மூன்று சக்கர சைக்கிளில் சென்று வருகிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக என் மனைவி, என்னுடன் சைக்கிளை தள்ளியவாறு வருவார். இது, 11வது ஆண்டு பழனி யாத்திரை. இவ்வாறு அவர் கூறினார்.
இவரது மனைவி ராஜேஸ்வரி கூறுகையில், முருக பக்தரான நானும், இவருக்கு துணையாக மூன்று ஆண்டுகளாக வருகிறேன். மேடான பகுதியில் சைக்கிளை செலுத்த சிரமப்படுவார். ஆகவே, அவருக்கு உதவியாக நானும் செல்கிறேன், என்றார்.