பதிவு செய்த நாள்
21
ஜன
2019
03:01
அன்னூர்: மேலத்திருப்பதி என்றழைக்கப்படும் மொண்டிபாளையம், வெங்கடேசப் பெருமாள் கோவிலில், 55ம் ஆண்டு தேர்த்திருவிழா, கடந்த, 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று (ஜன., 20ல்) காலை, 5:30 மணிக்கு, வெங்கடேச பெருமாள் ஸ்ரீ தேவி, பூதேவி சமேதரராக தேருக்கு எழுந்தருளினார். மதியம் 12:15 மணிக்கு தேரோட்டம் துவங்கியது.பல ஆயிரம் பக்தர்கள், அறங்காவலர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள், கட்டளைதாரர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
பலர் தேரின் மீது எலுமிச்சை, பழம், நிலக்கடலை மற்றும் தானியங்களை வீசி, பெருமாளுக்கு கோவிந்தா என கோஷமிட்டனர்.நான்கு மாட வீதிகள் வழியாக தேர் சென்றது. மதியம் 2:30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 21ம் தேதி மதியம் பரிவேட்டையும், 22ம் தேதி இரவு சுவாமி உலாவும் நடக்கிறது.