பதிவு செய்த நாள்
21
ஜன
2019
04:01
குமாரபாளையம்: தை முதல் ஞாயிறை முன்னிட்டு, குமாரபாளையம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. குமாரபாளையம், லட்சுமி நாராயண சுவாமி கோயில் வளாகத்தில், ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். நேற்று (ஜன., 20ல்), தை முதல் ஞாயிறை முன்னிட்டு, மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், எலுமிச்சை, பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பொருட்களை கொண்டு, சிறப்பு அபிஷேகம்; பின்னர், சுவாமிக்கு துளசிமாலை சாற்றப்பட்டு, அலங்கார, ஆராதனை; பக்தர்களின் பக்தி பாடல் பஜனை நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.