பதிவு செய்த நாள்
21
ஜன
2019
04:01
குமாரபாளையம்: குமாரபாளையம், ஷீரடி சாய்பாபா கோவிலில், திருக்குட நன்னீராட்டு விழா, முகூர்த்தக்கால் அமைக்கும் பணியுடன் துவங்கியது. குமாரபாளையம்- பள்ளிபாளையம் சாலை, எம்.ஜி.ஆர்., நகர் பஸ் நிறுத்தம் எதிரில், பூலக்காடு செல்லும் வழியில், ஷீரடி சாய்பாபா துவாரகாமாயி கோவில் பணி நடந்து வந்தது. கோவிலின் திருக்குட நன்னீராட்டு விழாவில், முகூர்த்தக்கால் அமைக்கும் பணி, பேரூராதீனம் கயிலை புனிதர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் அருளாசியுடன் நேற்று (ஜன., 20ல்) காலை துவங்கியது.
மாலையில், விநாயகர் மற்றும் திருவிளக்கு வழிபாடு, யாக சாலை வேள்விகள் நடத்தப்பட்டன. இன்று (ஜன., 21ல்) காலை, 6:30 மணிக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடக்கிறது. யாக சாலை வேள்வி மற்றும் நன்னீராட்டு விழாவை சாந்தலிங்கர் நெறி மன்ற சுந்தரமூர்த்தி, தஞ்சை முத்துக்குமார சுவாமி குழுவினர் நடத்தி வருகின்றனர். முகூர்த்தக்கால் அமைக்கும் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.