மேலூர் : மேலூர் அருகே செம்மினிபட்டியில் ஆண்டிபாலகர் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா நடந்தது.
பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பால்குடம் எடுத்தும், குழந்தை வரம் கிடைக்கப் பெற்றவர்கள் குழந்தையை கரும்பினால் ஆன தொட்டிலில் கட்டியும் நேர்த்திகடன் செலுத் தினர். வேலுக்கு பாலாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழியும் இறங்கினர்.
விழாவையொட்டி இன்று (ஜன., 22) மஞ்சுவிரட்டு நடக்கிறது. உறங்கான்பட்டி ஊராட்சி புலிமலைப்பட்டி உள்ளிட்ட பல கோயில்களில் தைப்பூச திருவிழா நடந்தது.
வாடிப்பட்டி: சமயநல்லூர் அய்யனார் கோயிலில் தைப்பூசத்திருவிழாவையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பூசாரி தினகரன் பூஜைகளை நடத்தினார். விழா கமிட்டி நிர்வாகிகள் ராஜா, தண்டபாணி தலைமையில் அன்னதானம் நடந்தது. வி.எச்.பி., மாவட்ட தலைவர் சந்திரசேகரன், துணை தலைவர் கணேசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.