மங்கலம்பேட்டை:பெரியநாயகி அன்னை ஆலய தேர்த் திருவிழா நாளை 23ம் தேதிநடக்கிறது .மங்கலம்பேட்டை அடுத்த கோணாங்குப்பம் பெரியநாயகி அன்னை ஆலய தேர்த்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை தினமும் காலை 7:00 மணி, பகல் 12:00 மணி, இரவு 7:00 மணிக்கு திருப்பலி நடந்தது. நாளை 23ம் தேதி தேர்த்திருவிழாவையொட்டி, காலை 7:00 மணிக்கு திருப்பலி, இரவு 7:00 மணிக்கு சிறப்பு திருப்பலி நடக்கிறது. அதைத் தொடர்ந்து, இரவு 9:00 மணிக்கு முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா நடக்கிறது.