பதிவு செய்த நாள்
22
ஜன
2019
03:01
விருத்தாசலம்:எடையூர் சீனிவாசப் பெருமாள் பஜனை மடம் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.விருத்தாசலம் அடுத்த எடையூரில் சீனிவாசப் பெருமாள், கோபாலகிருஷ்ணன் சமேத ஆண்டாள் பஜனை மடம் திருப்பணிகள் முடிந்து நேற்று (ஜன., 21ல்) கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி, நேற்று முன்தினம் (ஜன., 20ல்) காலை 8:00 மணிக்கு அனுக்ஞை, வாஸ்துசாந்தி, யாகசாலை பிரவேசம், ஹோம பூஜைகள், மாலை 4:00 மணிக்கு மேல் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று (ஜன.,21ல்) காலை 5:00 மணியளவில் சுப்ரபாதம், ஹோமங்கள் நடந்தன. காலை 6:30 மணியளவில் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், 7:00 மணிக்கு சாத்துமுறை, 8:00 மணிக்கு மங்கள சாஸனம், 9:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.