பதிவு செய்த நாள்
22
ஜன
2019
03:01
விருத்தாசலம்:தை பூசத்தையொட்டி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலுக்கு பக்தர்கள் காவடிகள், பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
விருத்தாசலம் மணிமுக்தாற்றிலிலிருந்து பக்தர்கள் நேற்று (ஜன., 21ல்) காலை 9:00 மணி யளவில் புனித நீர் எடுத்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலுக்கு சென்றனர்.
பின்னர், விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, விநாயகருக்கு வெள்ளிக் கவசமும், கொளஞ்சியப்பருக்கு தங்க கவசமும் சாத்தப்பட்டு, மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை நடந்தது.இதில், ஏராளமானோர் வழிபட்டனர். மாலை 5:30 மணியளவில் விநாயகர், கொளஞ்சியப்பர் உற்சவ மூர்த்திகள் வீதியுலா நடந்தது.
கிள்ளைபின்னத்தூர் பர்வதவதனி சமேத ராமநாதேஸ்வரர் கோவிலில் நேற்று (ஜன., 21ல்) காலை 9:00 மணிக்கு சிறப்பு அபிேஷகமும், மகா தீபாரதனையும் நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.