பதிவு செய்த நாள்
24
ஜன
2019
01:01
தர்மபுரி: கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தர்மபுரி கோட்டை வரமகாலட்சுமி சமேத பரவாசுதேவ பெருமாள் கோவிலில், மூன்று லட்சம் மதிப்பில் கொடி மரம் நடப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேகம், வரும், பிப்., 10ல் நடக்கிறது.
இதை முன்னிட்டு, கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து, மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில், வேங்கை மரம் கொண்டு வரப்பட்டது. கடந்த, மூன்று மாதங்களாக, பத்துக்கும் மேற்பட்ட பணியாட்கள் மூலம், கொடிமரமாக செதுக்கப்பட்டது. 30 அடி உயரம் கொண்ட கொடிமரத்தை, நேற்று காலை, 11:30 மணிக்கு, கோவில் பணியாளர்களை கொண்டு, கோபுரம் முன் நடப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பிப்., 7ல், காலை, 8:00 மணிக்கு, தீர்த்தக்குட ஊர்வலம் நடக்கிறது. மறுநாள், காலை, 6:00 மணிக்கு, பூர்ணாஹூதி, வாஸ்து ?ஹாமம் மற்றும் வாஸ்து பலி நடக்கிறது. 9ல், காலை, 8:30 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, மாலை, 4:30 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. வரும், பிப்., 10ல், காலை, 9:00 மணிக்கு மேல், மஹா கும்பாபி?ஷகம் நடக்கிறது. 10:00 மணிக்கு மேல், சர்வ தரிசனம் நடக்கிறது.