பதிவு செய்த நாள்
26
ஜன
2019
01:01
பழநி: குடியரசுதினத்தை முன்னிட்டு, பழநி முருகன்கோயில் தங்க கோபுரத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ், பக்தர்களிடம் சோதனை என பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. தைப்பூசவிழாவை முன்னிட்டு, பழநி முருகன் மலைக் கோயிலில் வெளிப்பிரகாரம், வின்ச் ஸ்டேஷன், படிப்பாதை, யானைப்பாதை போன்ற இடங்களில் போலீசார் ஏற்கனவே பாதுகாப்பு பணியில் உள்ளனர். இந்நிலையில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு பரிசோதனை செய்தபின் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
மலையில் தங்ககோபுரம் மற்றும் வெளிப்பிரகாரத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பாதவிநாயகர் கோயில், திருஆவினன்குடி, கிரிவீதி, சன்னதிவீதி, பஸ் ஸ்டாண்ட் அடிவாரம் ரோடு போன்ற மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் உள்ளனர். பழநி-கோவை பை-பாஸ் ரோடு, கொடைக்கானல் ரோடு பகுதிகளில் வாகன தணிக்கை நடக்கிறது. திண்டுக்கல் நகரிலும் வழிபாட்டு தலங்கள், பஸ்ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் உள்பட பல்வேறு பகுதிகளில் போலீசார் கண்காணிக்கின்றனர்.