பதிவு செய்த நாள்
26
ஜன
2019
01:01
பவானி: பவானி, சீதபாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று, பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. பவானி, ஜம்பை பேரூராட்சிக்கு உட்பட்ட, சீதபாளையம் கிராமத்தில், சக்தி விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நாளை மறுநாள், 27ம் தேதி நடக்க உள்ளது. இதையொட்டி, நேற்று காலை, அப்பகுதி பக்தர்கள், நூற்றுக்கும் மேற்பட்டோர், பவானி, கூடுதுறை காவிரி ஆற்றிலிருந்து, தீர்த்தம் எடுத்து வந்தனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக, சீதபாளையம் மாரியம்மன் கோவிலை அடைந்தனர். மேளதாளங்கள் முழங்க, மாரியம்மன் உற்சவருக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திருவீதி உலா நடந்தது.