பதிவு செய்த நாள்
26
ஜன
2019
01:01
செங்கல்பட்டு: செங்கல்பட்டு நத்தம் பகுதியில், புகழ்பெற்ற சேப்பாட்டியம்மன் கோவில், உள்ளது. இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், உலக நன்மைக்காக, மிளகாய் யாகம், கோ பூஜையுடன் நேற்று துவங்கியது.பகல், 12:00 மணிக்கு, சேப்பாட்டி அம்மன் மற்றும் அஸ்திராயர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளினர். 108 சங்குகள் வைக்கப்பட்டு, பூஜைகள் துவங்கின. பிரத்தியங்கிரா தேவி யாக குண்டத்தில், மிளகாய், திரவியங்கள் போட்டு, பக்தர்கள் வழிபட்டனர். நகரைச் சுற்றி உள்ள, கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர், செந்தில்குமார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.