பதிவு செய்த நாள்
28
ஜன
2019
01:01
குன்னூர்:குன்னூர் புனித செபஸ்தியார் தேவாலய பங்கு திருவிழா கோலாகலமாக கொண்டாடப் பட்டது.கடந்த, 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த விழாவில், ஜெபமாலை, ஆரா தனை, திருப்பலி, நவநாள் ஆகியவை நடந்தன. தொடர்ந்து தினமும் ஜெபமாலை, சிறப்பு திருப்பலி, நவநாள் ஜெபமாலை, பாடல் திருப்பலி மறையுரை ஆகியவை நடந்தன. நேற்று (ஜன., 27ல்) காலை மானந்தவாடி குருத்துவ மட அதிபர் அகஸ்டின் தலைமையில் மலையாள திருப்பலியும், புனித அந்தோணியர் ஆலய பங்கு குரு ஸ்டீபன் லாசர் தலைமையில், தமிழ் திருப்பலியும் நடந்தது.தொடர்ந்து அன்பின் விருந்து, திருவீதி ஊர்வலம் வாண வேடிக்கை நடந்தன.
இதில் உள்ளூர் பங்கு மக்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்னர். ஏற்பாடுகளை பங்கு தந்தை மார்ட்டின் புதுசேரி, பங்கு மக்கள் செய்திருந்தனர்.