பதிவு செய்த நாள்
29
ஜன
2019
12:01
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, மூன்றாவது மண்டலத்துக்கு உட்பட்ட ஆசிரியர் காலனி, மின் வாரிய குடியிருப்பு பகுதியில், பூ மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடப்பாண்டு பொங்கல் விழா, கடந்த, 22ல், பூச்சாட்டுதல், கம்பம் நடுதலுடன் தொடங்கியது. இதையடுத்து கம்பத்துக்கு, தினமும் புனித நீரை ஊற்றி, பக்தர்கள் வழிபடுகின்றனர். மூலவருக்கு தினமும் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. பால்குடம், அக்னிசட்டி ஊர்வலம், காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், இன்று நடக்கிறது. சிறப்பு அபிஷேகம், பொங்கல் வைபவம், மாவிளக்கு ஊர்வலம் நாளை நடக்கிறது.